மேமோகிராஃபி பரிசோதனை திட்டம்


மார்பகப் புற்றுநோயானது பெண்களிடையே ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். மேமோகிராஃபி மூலம் மார்பகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறிய முடியும். அதாவது மார்பகப் புற்றுநோய் மிகச் சிறியதாக இருக்கும்போது - நீங்கள் அதை உணரும் முன்பே - கண்டறிய முடியும். மார்பகப் புற்றுநோய் எவ்வளவு சீக்கிரமாகக் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாக சிகிச்சையளிக்க முடியும், மேலும் மீண்டும் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இது என்ன?


மேமோகிராஃபி பரிசோதனை திட்டத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் மார்பக பரிசோதனை செய்துகொள்வதற்காக அழைக்கப்படுவீர்கள்.

யார் இதில் பங்கேற்கலாம், நான் எப்படி பங்கேற்க முடியும்?


பேசல்-ஸ்டாட் மாகாணத்தில் வசிக்கும் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் பங்கேற்கலாம்.


தொலைபேசி மூலம் பதிவு செய்தல்:
உங்களுக்கு இதுவரைஅழைப்பு வரவில்லை என்றால், 061 319 91 70 என்ற தொலைபேசி எண்ணில் உங்கள் சந்திப்பை பதிவு செய்திடுங்கள்.



வலைத்தளம் மூலம் பதிவு செய்தல்: நீங்கள் ஏற்கனவே அழைப்பைப் பெற்றிருந்தால், www.screening-mammo.ch/termin-vereinbaren   என்ற வலைத்தளம் வழியாகவும் உங்கள் சந்திப்பை ஆன்லைனில் பதிவு செய்யலாம். உங்கள் அழைப்புக் கடிதத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள குறிப்பு எண்ணை நீங்கள் குறிப்பிட வேண்டும்.






ஆரோக்கிய வினாப்பட்டியல

பூர்த்தி செய்த படிவத்தை

உங்களுடன் எடுத்துச் செல்லவும்

– திருப்பி அனுப்ப வேண்டாம்